ஆம்னி பேருந்துகளுக்கு இணையான வசதிகளை கொண்ட தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிதாக பச்சை நிறத்தில் பிஎஸ்6 இன்ஜினுடன் கூடிய ஸ்லீப்பர் பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் காலவதியாகியும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அவ்வப்போது விபத்துகளில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. எனவே அதனை மாற்றி புதிய பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்துக் கழகம் டெண்டர் விட்டு, பேருந்துகளை கொள்முதல் செய்து வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சேஸிஸ் கொண்டு இந்த பேருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளது. 200 பேருந்துகளை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு டெண்டர் விடப்பட்டன.

முதல்கட்டமாக 60 பேருந்துகள் ஜூலை மாதத்திற்குள் பாடி கட்டப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தமிழ்நாடு விரைவுப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் முதல் 10 பேருந்துகள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு சென்னையில் உள்ள விரைவு போக்குவரத்து கழக தலைமை நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த பேருந்தில் ஆம்னி பேருந்துகளுக்கு இணையான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. படுக்கை மற்றும் இருக்கை வசதிகளுடன் இந்த பேருந்துகள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கீழ்தளத்திலும் படுக்கை வசதிகளுடன் கூடிய பேருந்துகள் மூலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மிகுந்த பயனடைய உள்ளனர். புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பேனிக் பட்டன் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மின்விசிறி மற்றும் மொபைல் போன் சார்ஜர், ரீடிங்க் லைட் போன்றவை கொண்டுவரப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here