இந்தியன் 2 படத்தின் விமர்சனங்களுக்கு மத்தியில் ஷங்கரின் அடுத்தபடமான கேம் சேஞ்சர் திரைப்படம் இன்று உலகம் முழுக்க வெளியாகி இருக்கிறது.பொங்கலுக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே வெளியான இப்படத்தின் விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரம்மாண்ட சினிமா எடுப்பதில் பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கர், தெலுங்கு மெகா குளோபல் ஸ்டார் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படம் உருவாகியுள்ளது. தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆனது.
குறிப்பாக பாடல்களுக்கு மட்டுமே கிட்டத்தட்ட 96 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.அதில் ஜருகண்டி பாடலுக்கு மட்டும் 23 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் கதை என்பதால் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு நிலவியது. இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராம் சரணுக்கும், அரசியல்வாதியான எஸ்.ஜே.சூர்யாவுக்கும் நடைபெறும் மோதல்களே படத்தின் ஒன்லைன் கதை. மேலும் Infrared தொழில்நுட்பத்தில் புதிய கேமராவில் ஒரு பாடலும் படமாக்கப்பட்டுள்ளது.