தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அனைத்தும் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக பெய்து வரும் அதி கனமழையால் ஆறுகள் ,குளங்கள் அருவிகள் நிரம்பி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.
அதேபோல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வரும் நிலையில் தேனி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக வைகை அணைக்கு வரும் நீரின் அளவு பல மடங்கு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததை அடுத்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தபோது முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 68 அடியாக உயர்ந்தபோது இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் இந்த நிலையில் இன்று காலை 5 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால வைகை கரையோர மக்களுக்கு இறுதிக்கட்ட மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .