தமிழ்நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 26) நியாயவிலைக் கடைகள் இயங்கும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் ஹா்சஹாய் மீனா உத்தரவிட்டுள்ளாா்.
அவர் வெள்ளிக்கிழமை அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மே மாதத்திற்கான பொது விநியோகத் திட்டத்தின் சிறப்புப் பொருள்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். இதையொட்டி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விடுமுறை பின்னர் அறிவிக்கப்படும்.