ராகுல்காந்தியின் வீடியோவை பதிவு செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் இவர் தான் என பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அடுத்த பிரதமர் மோடியா.? ராகுல் காந்தியா என்ற போட்டியானது ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய நடை பயணத்தை நாடு முழவதும் மேற்கொண்டிருந்தார்.

அப்போது பல தரப்பு மக்களையும் சந்தித்து பிரச்சனைகளை உன்னிப்பாக கேட்டறிந்தார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சந்தித்துக்கும் போது படிப்பு தொடர்பாகவும், கல்வி தொடர்பான முக்கியத்துவத்தையும் கூறி வருகிறார். இதே போல கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களோடு மக்களாக இணைந்து அவர்களது நம்பிக்கையை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் பாஜகவோடு கூட்டணியில் இருந்த அதிமுக விலகியுள்ள நிலையில், மத்தியில் யாருக்கும் ஆதரவு இல்லாமல் தேர்தலை அதிமுக எதிர்கொண்டது. இந்தநிலையில் ராகுல் காந்தியின் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி என கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் ராகுல் காந்தி ஓட்டலில் சாப்பிட்டுகொண்டுள்ளார். அப்போது அங்கு வரும் மக்களிடம் சகஜமாக பேசிய காட்சியானது இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் செல்லூர் ராஜூவின் பதிவிற்கு கீழ் அதிமுக மற்றும் பாஜகவினர் செல்லூர் ராஜூவை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் திமுகவினர் செல்லூர் ராஜூ கருத்தை வரவேற்று பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here