ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்ளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.
17வது சுற்று முடிவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. 114,439 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. நாம் தமிழர் கட்சி 23,810 வாக்குகள் பெற்றுள்ளது. 17 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 90,629 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நோட்டா – 6040 வாக்குகளை பெற்றுள்ளது. திமுக தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தது.
மூன்று பெட்டிகளில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. பழுதடைந்த 3 இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் மட்டுமே தற்போது எண்ணப்படுகின்றன. இந்த எண்ணிக்கை நிறைவடைந்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.