சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு இ பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளும், கொடைக்கானலில் உள்ள பொதுமக்களும் அதே போல ஊட்டியில் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், ஊட்டியில் உள்ள பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் இ பாஸ் நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டது. இ-பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகள் மட்டுமே இந்த மலைவாசல் தலங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் இன்று முதல் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.

இ-பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகள் மட்டுமே கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு செல்ல முடியும். இ பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகள் சோதனை செய்யப்பட்டு கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் பணியாளர்கள் இ பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகளின் வாகனங்களை கொடைக்கானலுக்கு அனுமதித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரே நேரத்தில் பல சுற்றுலாப் பயணிகள் இ பாஸ் பெறுவதற்கு வலைதளத்தில் முயன்று வருவதால் இபாஸ் வலைதளம் முடங்கி வருகிறது. இதே போல உள்ளூர் வாகன உரிமைதாரர்களின் வாகனங்களுக்கு இ பாஸ் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இவற்றை சீர் செய்து விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உரிய இ பாஸ் கிடைப்பதற்கு உரிய நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும், கொடைக்கானல் வாழ் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here