நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,அதிமுக தலைமைக் அலுவலகத்தில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது குறித்து சென்னை மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல் பிரச்சார குழு மற்றும் தேர்தல் தொகுதி பங்கிட்டு குழு ஆலோசனை நடத்தியது.
ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு மத்தியில் கூறியதாவது;
நாடாளுமன்றத் தேர்தலை கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைத்து சந்திப்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி குறித்து அறிவிப்புகள் முறையாக வெளியிடப்படும் என்றும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என கூறினார் .
மேலும் வட இந்தியாவில் இண்டியா கூட்டணி, நெல்லிக்காய் மூட்டை போல சிதறிக்கொண்டு இருக்கிறது. அதே நிலைமை தமிழகத்திலும் வரும். திமுக கூட்டணியில் உள்ளவர்கள் ஒரே கொள்கையில் ஊறியவர்கள் அல்ல,அவர்களிடையே முரண்பாடுகள் உள்ளன.எனவே இந்தியா கூட்டணி சிதறியதை போல திமுக கூட்டணியும் சிதறும் என்று பேசினார். அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமிழ்நாடு மக்களுக்கு எவ்வித திட்டங்களையும் செயல்படுத்தாமல், திமுக குடும்பத்தினர் மட்டும் ஆசியாவின் பணக்கார குடும்பங்களாக மாறியதுதான் அவர்களது சாதனை. மேலும் திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தமிழக விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.பருவ மழையின் போது விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டிய இழப்பீடை உரிய நேரத்துக்குள் திமுக அரசு கொடுக்க தவறிவிட்டது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாயிகளுக்கு திமுக செய்த துரோகங்களை தோலுரித்துக் சுட்டிக்காட்டுவோம் என தெரிவித்தார்.