2021ல் பிஹெச்இஎல் நிறுவனத்துக்குப் பதிலாக பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திடம் மீண்டும் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

பிஹெச்இஎல் ஆர்டர்களை நம்பியிருக்கும் சிறு குறு நிறுவனங்களின் நலன்களுக்காகப் பேசுவது போல் தமிழக முதல்வர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இன்று, திருச்சியில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கிவைத்துள்ளார். பிறகு மேடையில் இருந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பி.ஹெச்.இ.எல். (BHEL) ஐச் சார்ந்துள்ள சிறு குறு நிறுவனங்கள் முந்தைய காலங்களைப் போலல்லாமல், ஆர்டர் பற்றாக்குறையில் உள்ளன என்று கூறினார்.

2021ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித்துறைக் கூட்டத்தில் பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திடம் மீண்டும் ஒப்பந்தம் செய்தார். சமீப காலம் வரை ஒப்பந்தப் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால், அந்த ஒப்பந்தத்திற்கு விண்ணப்பித்த மற்றொரு நிறுவனமான பிஹெச்இஎல் பரிசீலிக்கப்படவில்லை. அதற்கான காரணம் என்ன என்று தமிழ்நாடு அரசுக்கு மட்டும்தான் தெரியும்.

பிஹெச்இஎல் தொழிற்சங்கங்கள் பிஜிஆர் எனர்ஜி உடன் மீண்டும் ஒப்பந்தம் கையெழுத்திட்டதை எதிர்த்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

பிஜிஆர் எனர்ஜி போன்ற நலிவடைந்த நிறுவனத்துக்கு ரூ.4442 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை அளித்துள்ளனர். இன்று, பிஹெச்இஎல் ஆர்டர்களை நம்பியிருக்கும் சிறு குறு நிறுவனங்களுக்காக தமிழக முதல்வர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இந்த நிலைக்குத் தாங்கள்தான் காரணம் என்பதை திமுக இன்னும் உணரவில்லை.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here