‘திண்ணையில் இல்லை, ரோட்டில் இருந்தவன் நான் ‘ – கிண்டலுக்கு பதிலடி கொடுத்த நடிகர் சூரி !

சூரியின் தன்னம்பிக்கை நிறைந்த பதில்; கடந்த கால வலிகளையும், வெற்றியின் மதிப்பையும் உணர்த்திய சூரி

prime9logo
211 Views
1 Min Read
Highlights
  • நடிகர் சூரி தனது சொந்த ஊரான மதுரை ராஜாக்கூரில் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடினார்
  • அவர் வெளியிட்ட வீடியோவுக்கு ஒரு பயனர் கிண்டலாக, "திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை" என கமெண்ட் செய்தார்
  • "திண்ணையில் இல்லை நண்பா, பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தேன்," என்று தனது கடந்த கால போராட்டத்தை அவர் குறிப்பிட்டார்

நடிகர் சூரி தனது குடும்பத்துடன் மதுரை மாவட்டத்தில் உள்ள  ராஜாக்கூரில் வசித்து வருகிறார்.இந்த வருடம் தீபாவளியை  சூரி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலானது.அந்த வீடியோவில், ” எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி ” என குறிப்பிட்டு  அந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் அதில்  ஒருவர் மட்டும், திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை என கிண்டலாக கமெண்ட் செய்து இருந்தார்.அதற்கு பதில் அளித்துள்ள நடிகர் சூரி, 

” திண்ணையில் இல்லை நண்பா பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. 

நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply