ஜூலை 30 அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ‘ராமாயணா’ ட்ரெய்லர் ரிலீஸ் – படக்குழு அறிவிப்பு

Priya
883 Views
1 Min Read

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ராமாயணா’ படத்தின் ட்ரெய்லர் வரும் ஜூலை 30-ஆம் தேதி அதிகாலை 4:15 மணிக்கு வெளியிடப்படும் எனத் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக ஜூலை 24-ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின் ட்ரெய்லர், சர்வதேச விநியோகத்துக்காக சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது. 

இந்நிலையில், சமூக வலைதளங்களில் புதிய வெளியீட்டுத் தேதியைப் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, “மங்களகரமான பிரம்ம முகூர்த்தத்தில், ஜூலை 30 (வியாழக்கிழமை) அதிகாலை 4:15 மணிக்கு ‘ராமாயணா’ டிரெய்லருடன் புதிய விடியலை உலகளவில் வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ரன்பீர் கபூர் ராமராக, சாய் பல்லவி சீதையாக மற்றும் யஷ் ராவணனாக நடித்துள்ள இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply