‘சர்தார் 2’ ட்ரெய்லர் எப்படி? – கார்த்தி vs எஸ்.ஜே.சூர்யா மிரட்டல்!

Priya
795 Views
1 Min Read

கார்த்தி நடிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள வரும் ‘சர்தார் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. 2022-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘சர்தார்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த ஸ்பை த்ரில்லர் படம் வரும் 10 வெளியாகிறது.

ட்ரெய்லர் எப்படி? – ட்ரெய்லரின் தொடக்கத்தில், நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அதைத் தடுக்க ஒரு ரகசிய உளவு நடவடிக்கை தேவை என்றும் அதிகாரிகள் விவாதிக்கின்றனர். முந்தைய பாகத்தைப் போலவே இதிலும் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். 

ஜப்பான் நாட்டின் நடக்கும் காட்சிகள் ட்ரெய்லரில் விறுவிறுப்பாகக் காட்டப்பட்டுள்ளன. ‘ஒரு உயிர் கூட போகக் கூடாது’ என்ற லட்சியத்துடன் களமிறங்கி, பின்னர் ஏற்படும் இழப்புகளால் தவிக்கும் காட்சியில் கார்த்தி உணர்வுபூர்வ நடிப்பை வழங்குகிறார். 

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டி இருப்பார் என்று ட்ரெய்லரில் வரும் காட்சிகள் உறுதியளிக்கின்றன. மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். பின்னணி இசை வலு சேர்க்கிறது. முதல் பாகத்தை காட்டிலும் இதில் ஆக்‌ஷன் காட்சிகள் தரமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply