இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி, இளம் நடிகர் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு திரைத்துறையினர்,மற்றும் முக்கிய பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் இயக்குநர் மணிரத்னம் பைசன் திரைப்படத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அந்த பதிவை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்.
” இப்போது தான் படத்தை பார்த்தேன் மாரி. ரொம்ப பிடித்திருந்தது. நீ தான் அந்த பைசன் உங்கள் உழைப்பை பார்த்து பெருமைப்படுகிறேன். உன் குரல் முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.
” பரியேறும்பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையையும் பார்த்து கவனித்து பாராட்டி என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வாத்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார்” என இயக்குநர் மணிரத்னத்திற்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

