Bison: பைசன் – காளமாடன் வெல்லட்டும்! – பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்!.

மாரி செல்வராஜின் உணர்வுபூர்வமான படைப்பான பைசன் ( Bison ) திரைப்படத்திற்கு துணை முதல்வர் அளித்த மனப்பூர்வமான வாழ்த்து!

Surya
110 Views
1 Min Read
Highlights
  • பைசன் ( Bison ) திரைப்படத்தை துணை முதல்வர் உதயநிதி பார்த்து பாராட்டியுள்ளார்
  • இயக்குநர் மாரி செல்வராஜின் முக்கியமான படைப்பாக 'பைசன்' கருதப்படுகிறது
  • துருவ் விக்ரமின் நடிப்பு, பாத்திரத்தின் அரசியல் மற்றும் உணர்வுகளை உள்வாங்கி இருப்பதாகப் பாராட்டு

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் (Bison) திரைப்படம் இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

இளம் நடிகர் துருவ் விக்ரம் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை பாராட்டியுள்ள துணை முதல்வர் தனது எக்ஸ் தள பதிவில்,

“பைசன் திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார்

மாரி செல்வராஜ் சார். வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.

ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் craft செய்திருக்கிறார்.

படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி துருவ் விக்ரம் உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.

பைசன் – காளமாடன் வெல்லட்டும்! ” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply