“எங்களுக்கு இந்த சினிமா உலகமே ஒரு பெரிய குடும்பம்” – நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி

Priya
2 Views
3 Min Read

நடிகர் பிரசாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ரஞ்ஜன்’ படத்தின் டைட்டில் லுக் டீஸர், திரைபிரபலங்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தில் முதன்மை நாயகனாக பிரசாந்த் நடிக்கிறார். தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி, இளம் நாயகனாக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா நடிக்கிறார்.

பிரசாந்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன், இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது.

இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரசாந்த், “எப்போதும் போல நீங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து, சேர்ந்து இந்த நிகழ்வை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு புதிய படத்தின் தலைப்பு வெளியீடும், அதே நேரத்தில் ஒரு புதிய தொடக்கமும் இங்கே நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்.

இந்த தலைப்பை வெளியிட வருகை தந்த தயாரிப்பாளர்கள். இயக்குநர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

இன்று இந்த படத்தின் மூலம் ஹரி அறிமுகமாகிறார். ஒரு தந்தையாக, மேடையில் தனது மகன் நிற்பதைப் பார்ப்பது எவ்வளவு பெருமையான தருணமோ, அதே உணர்வு கதிரேசன் அவர்களுக்கும் இருக்கிறது. அது ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி அதேபோல், ஒரு மகள் மேடையில் நிற்கும் தருணம், உலகமே அவளை கவனிக்கும் தருணம் அது ஒரு பெற்றோருக்கு மிகப் பெரிய பெருமை அந்த உணர்வை நாமெல்லாரும் பகிர்ந்து கொள்கிறோம்.

எங்களுக்கு இந்த சினிமா உலகமே ஒரு பெரிய குடும்பம். அந்த குடும்பத்தில் இப்படி ஒரு அழகான தருணத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

இந்த படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது. இதில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களும் அன்பானவர்களும் இது ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டணி ஒரு படம் சிறியதாக இருந்தாலும் அதில் பெரிய கலைஞர்கள் சேர்ந்தால் அது மேலும் உயரம் அடையும் அதுபோல, இந்த படமும் ஒரு மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிக வலிமையானது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் மற்றும் கலை இயக்குனர் செந்தில் ராகவன் இவர்கள் அனைவரும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர். இந்த அணியைக் கொண்டுவந்த முக்கியமான நபர் என் அப்பா எங்கள் இயக்குநர் அவருக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு இயக்குநராகவும். நடிகராகவும், கலைஞர்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் அவர் நன்றாக அறிவார். அவருடன் பணிபுரிவது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகிறது கண்டிப்பாக இது ஒரு தரமான படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்.

இறுதியாக, இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு அளித்துள்ள பத்திரிகை க தொலைக்காட்சி, வலைதள நண்பர்கள் உட்பட உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு வலிமையாக உள்ளது. உலகம் முழுதும் இருக்கும் என் ரசிகர்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு என் அன்பும் நன்றியும் விரைவில் திரையரங்கில் சந்திப்போம்” என்றார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு, பெரும் பொருட்செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடந்து வருகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply