கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 14 கோடியே 19 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவிலும் மற்றும் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 97 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலும் கல்லூரிக்கான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

சென்னை, தரமணி மையத் தொழில்நுட்ப வளாகத்தில் அமைந்துள்ள அச்சு தொழில்நுட்பப் பயிலகம், நெசவு தொழில்நுட்ப கல்லூரி, தோல் தொழில்நுட்பப் பயிலகம், வேதியியல் தொழில்நுட்பப் பயிலகம் மற்றும் மாநில வணிகக் கல்வி பயிலகம் ஆகிய ஐந்து சிறப்பு நிறுவனங்களில், 49 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆய்வகக் கட்டடங்கள், வகுப்பறைகள், முதல்வர் அறைகள், தேர்வு அலுவலகக் கட்டடங்கள் மற்றும் கல்விசார் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

சென்னை, தரமணி, டாக்டர் தர்மாம்பாள் மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 18 கோடியே 18 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம், அண்ணா பல்கலைக் கழக மண்டல வளாகத்தில் 15 கோடியே 65 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 7 கோடியே 47 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலையரங்கக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் 8 கோடியே 65 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவிலும், வேலூர், தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் 8 கோடியே 65 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவிலும், போடிநாயக்கனூர், அரசு பொறியியல் கல்லூரியில் 8 கோடியே 66 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலவிலும் மற்றும் காரைக்குடி, அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் 8 கோடியே 67 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவிலும் உள்விளையாட்டு அரங்கங்கள் கட்டப்பட்டுள்ளன.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் 4 கோடி ரூபாய் செலவில் உடற்கல்வி துறைக்கான தரைதள கட்டடம் மற்றும் நுண்கலை துறைக்கான முதல் தளக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

திண்டுக்கல், எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 10 ஆய்வகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மொத்தம் 156 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here