தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பி ஆர் எஸ் கட்சித் தலைவருமான சந்திர சேகர் ராவ் பேருந்து யாத்திரை மூலம் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார்
புவனகிரி பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சந்திர சேகர் ராவ், ’’ பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. இதனால் நாட்டுக்கு எந்தவொரு பலனும் இல்லை. இவர்களது ஆட்சியில் நாட்டின் மானம்தான் பறிபோனது. எவ்வித வளர்ச்சியும் இல்லை. குறிப்பாக தெலங்கானா மாநிலத்துக்காக பாஜக எதுவுமே செய்யவில்லை.
பாஜக என்றாலே அட்சதை, புளியோதரை, தீர்த்தம் மற்றும் காவி நிறம் மட்டுமே. யாதாத்ரி நரசிம்மர் கோயிலை நான் மிகவும் அற்புதமாக சீரமைத்தேன். ஆனால், அது குறித்து நான் எப்போதாவது பேசினேனா ? அரசியல் செய்தேனா ? இல்லையே.. மதம் சார்ந்து நான் இதுவரை அரசியல் செய்தது கிடையாது.நான் பிறந்ததே தெலங்கானாவுக்காகத்தான் என்று சந்திரசேகர ராவ் பேசியுள்ளார்.