தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்து சாமானிய மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலையிலும் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்தைத் தாண்டி விற்பனையாகி வந்த நிலையில், இன்று அதன் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,02,000-க்கு விற்பனையாகிறது. இந்த விலை வீழ்ச்சி நகைப்பிரியர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் விலை இன்னும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதேபோல், 24 காரட் தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் 24 காரட் தங்கம் ரூ.13,909-க்கும், 10 கிராம் தங்கம் ரூ.1,39,090-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கம் ஆகியவற்றால் இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சந்தையில் நிலவும் இந்த மாற்றங்கள் நடுத்தர வர்க்கத்தினருக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.272-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ள செய்தியும் இன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நகை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இன்றைய விலை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
கடந்த ஜனவரி 6-ஆம் தேதி ஆபரணத் தங்கம் அதன் உச்சபட்ச விலையான ரூ.1,02,830-ஐத் தொட்டிருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக விலை சரிந்து வருவது கவனிக்கத்தக்கது. தங்கம் விலையில் ஏற்படும் இந்தத் திடீர் மாற்றங்கள் முதலீட்டாளர்களிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளன. இருப்பினும், இன்றைய சரிவு பொதுமக்களுக்குக் தற்காலிக நிம்மதியைத் தந்துள்ளது என்பதில் ஐயமில்லை.

