தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருக்கிறது, அதில் எந்த மாற்றமும் இல்லை;. தமிழ்நாட்டிலிருந்து NDA கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது. அதை அடைய முடியவில்லை என்பது வருத்தம் என்று கூறியுள்ளார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40க்கு 40 என்ற சாதனையை திமுக படைத்துள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அதில், “தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருக்கிறது, அதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டிலிருந்து NDA கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது

அதை தற்போது அடைய முடியவில்லை என்பது வருத்தம். 2026ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது தான் எங்களின் இலக்கு. 2026-ல் தமிழக அரசியலில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமையும். நிச்சயம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடக்கும். தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைத்திருப்பது தோல்வி அல்ல. சில இடங்களில் நல்ல இடங்களில் வாக்குகளை வாங்கி உள்ளோம். 23 இடங்களில் சிறந்த இடத்தை பெற்றோம்.

எங்களுக்கு வாக்கு சதவீதத்தை அதிகரிக்க மக்கள் ஓட்டு போட்டனர். தமிழகம் முழுக்க பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தொடர்ந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தும்” என்று சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here