பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி. இவர் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டிருந்தார். இதற்கு பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.

பாஜக பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி தற்போது எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி. இவர் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டிருந்தார். தனக்கு தான் அந்த தொகுதி ஒதுக்கப்படும் என உறுதியாக இருந்ததால் அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக வேலூர் முன்னாள் மேயர் கார்த்திகாயினி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் தடா பெரியசாமி கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், தடா பெரியசாமி தற்போது எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதிமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தடா பெரியசாமி: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளராகவும், பட்டியல் சமூக அணியின் மாநில தலைவராக இருக்கும் தன்னிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் வேலூரில் இருந்து ஒரு பெண்மணியை அழைத்து வந்து வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து நான் தீவிரமாக களமாடி வரும் நிலையில் தன்னை வேட்பாளராக அறிவிக்காமல் அல்லது தொகுதியை சேர்ந்த வேறொரு நபரை அறிவிக்காமல் எங்கிருந்தோ ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர். தனக்கான முக்கியத்துவம் இல்லாத கட்சியில் தொடர விரும்பவில்லை. ஆகையால் அதிமுகவில் இணைந்துள்ளேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here