தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையுடன் BIG TECH நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில் உலகத்தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidence’ மற்றும் ‘BIG TECH’ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பிள்ளைபாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.1003 கோடியில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.1003 கோடி முதலீட்டில் அமையும் தொழிற்சாலை மூலம் 840 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது