சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது ;
வெயில் காலம் துவங்கியதால் தர்பூசணி பழங்கள் விற்பனையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தர்பூசணி பழங்களை இயற்கையாக இல்லாமல் பழத்தின் நிறத்தை மாற்ற வியாபாரிகள் செயற்கையாக கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், இது தொடர்பாக அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.