கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தும் கவனிக்கப்பட்டார்
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என தற்காலிகமாக இத்திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்பொழுது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது