உங்கள் வீட்டில் வாஸ்து தொடர்பான சில தவறுகளை நீங்கள் செய்தால், அது உங்களுக்கு நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் கடனில் மூழ்கலாம் மற்றும் உங்கள் வீட்டிற்கு வறுமை வரலாம். எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால் விளைவுகளைத் தவிர்க்கலாம்.
வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதற்காக மிகவும் கடினமாக உழைக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? எவ்வளவு உழைத்தும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அதற்கு சில வாஸ்து தவறுகள்தான் காரணமாக இருக்கும். அப்படிப்பட்ட வாஸ்து தவறுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலில் இருள் இருந்தால் அது மிகவும் அசுபமானது. வீட்டின் பிரதான நுழைவாயிலில் இருள் சூழ்ந்தால், செய்யும் வேலைகள் கெட்டுப்போகும், இதனால், கடினமாக உழைத்தாலும், பல வேலைகளில் வெற்றி பெற முடியாது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, உடைந்த கண்ணாடி அல்லது உடைந்த வேறு எந்தப் பொருளையும் வீட்டில் வைக்கக்கூடாது, ஏனெனில் அது வீட்டிலிருந்து நேர்மறை ஆற்றலை அகற்றி, எதிர்மறை ஆற்றலைப் பரப்புகிறது.
வீட்டில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை முழுமையாக திறந்து வைக்காதீர்கள். இப்படிச் செய்வதால் மனக்கசப்பும், எதிர்மறைச் சக்தியும் வீட்டிற்குள் நுழையலாம் என்று சொல்லுவோம்.
வீட்டில் உள்ள உடைகள், செருப்புகள், காலணிகள் போன்றவற்றை ஒழுங்காக வைக்காமல் அங்கும் இங்கும் வீசி எறிந்தால், அது மிகவும் தவறு ஏனெனில் அவ்வாறு செய்வதால் லட்சுமி தேவிக்கு கோபம் வரும். இதனால் உங்கள் வீட்டில் பணப் பற்றாக்குறை ஏற்படலாம்.
குழாயை திறந்து விட்டு தண்ணீரை வீணாக்குவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். வாஸ்து சாஸ்திரத்தின் படி இது அசுபமானது என்று சொல்லலாம். இதனால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் மன ரீதியாகவும் பலவீனமாகலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் குளியலறை சமையலறைக்கு எதிரே அல்லது அருகில் இருக்கக்கூடாது. மற்றும் தெற்கு, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் இருக்கக்கூடாது.
மேற்கூறிய வாஸ்து தொடர்பான ஆலோசனைகளைப் பின்பற்றி உங்கள் பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுங்கள்..