இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்;

தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மாநில வளர்ச்சிக்கோ, மக்கள் நலனுக்கோ எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை; கொடுத்த வாக்குறுதிகளையும் முழுதுமாக நிறைவேற்றவில்லை.

வெறும் விளம்பரங்களை வைத்தே காலம் ஓட்டி கொண்டிருக்கும் ‘ஸ்டிக்கர்’ மாடல் தி.மு.க., அரசின் முதல்வர் ஸ்டாலின், மீண்டும் ஒரு முறை மத்திய அரசின் திட்டங்களுக்கு, ஸ்டிக்கர் ஒட்ட முயன்றுள்ளார்.

பள்ளி கல்வி முன்னேற்றத்திற்கான மத்திய அரசின், ‘சமக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி, 5,858.32 கோடி ரூபாய். தி.மு.க.,வின் சாதனைகளாக முதல்வர் காட்டி கொள்ள முயற்சிப்பவை அனைத்துமே, சமக்ரா சிக் ஷா திட்டத்தின்படி, மத்திய அரசின் நிதியில் நிறைவேற்றப்பட்டவை தான்.

பள்ளி கல்வியில், தி.மு.க.,வின் ஒரே சாதனை கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை, இரு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகளுக்கு வழங்காமல் இருந்தது தான். உண்மை இப்படி இருக்க, சிறிதும் கூச்சமே இல்லாமல் அவற்றை தி.மு.க.,வின் சாதனையாக காட்டி கொள்ள முயற்சிப்பது, நகைப்பை ஏற்படுத்துகிறது.

சமக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ் நிதியை பயன்படுத்தி, பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்திற்கான, 1,000 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை, தமிழக அரசு நிறுவனமான, ‘எல்காட்’ நிறுவனத்திற்கு வழங்காமல், கேரள மாநில அரசு நிறுவனமான, ‘கெல்ட்ரான்’ நிறுவனத்திற்கு வழங்கியதன் பின்னணியை முதல்வர் தெளிவுபடுத்துவாரா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here