கோடைகாலம் வந்துவிட்டாலே குடிநீர் பஞ்சமும் வந்துவிடும்..
தமிழ்நாட்டில் தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
அக்னி நட்சத்திரமே இன்னும் தொடங்காத நிலையில் கடுமையான வெப்பம் அனல் வீசத் தொடங்கியிருக்கிறது..
எனவே தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.. குடிநீரை ஆதாரமாகக் கொண்டுள்ள ஏரிகளில் முழு கொள்ளளவு.
கடந்த வார நிலவரப்படி 57 சதவீதம் மட்டுமே நீர் இருக்கிறது.
தமிழகத்தில் கடலூர், கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக இன்றைய தினம் தண்ணீர் பஞ்சத்தை போக்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களுக்கும் குடிநீர் விநியோகத்திற்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் தடையின்றி செயல்பட சீரான மின்விநியோகம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.