காலைல இருந்து சோசியல் மீடியா எந்த பக்கம் திரும்புனாலோ அஜித் அஜித்-னு தான் ஒலிக்குது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித் குமார் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அதன்படி துபாயில் நடந்த 24H ரேஸில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்று மூன்றாம் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் அஜித்குமார் மேடையில் பரிசை வாங்கும் போது செய்த செயல் காணொளியாக வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேடையில் ஒரு கையில் பரிசையும் மறுகையில் தேசிய கொடியையும் அஜித் வைத்துள்ளார். அதோடு தனது மகன் ஆத்விக் கையில் கோப்பையை கொடுத்து மக்களுக்கு காட்டக் கூறியுள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.