மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழுவை திமுகவும், மதிமுகவும் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில் தற்போது அதிமுகவும் தொகுதிப் பங்கீட்டு குழுவை அறிவித்துள்ளது. அந்த வகையில் அதிமுக துணைப் பொதுச்செயலர் கே.பி.
முனுசாமி தலைமையில் தொகுதிப் பங்கீடு குழு அமைக்கப்பட்டுள்ளது. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலர் பி.தங்கமணி, தலைமை நிலையச் செயலர் எஸ்.பி.வேலுமணி, அமைப்புச் செயலர் பா.பென்ஜமின் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் அதிமுக துணைப் பொதுச்செயலர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கைக் குழு அறிவிக்கப் பட்டுள்ளது. இக்குழுவில் மூத்த நிர்வாகிகள் சி.பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலர் மு.தம்பிதுரை தலைமையில் 10 பேர் கொண்ட தேர்தல் பிரசாரக் குழு அறிவிக்கப்பட் டுள்ளது. இக்குழுவில் மூத்த நிர்வாகிகள் கே.ஏ.செங்கோட்டையன், என். தளவாய்சுந்தரம்,செல்லூர் கே.ராஜு, ப.தனபால், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், எஸ்.கோகுலஇந்திரா, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அதிமுக அமைப்புச் செயலர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் 10 பேர் கொண்ட தேர்தல் விளம்பரக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், மூத்த நிர்வாகிகள் கடம்பூர் சி.ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பி.வேணுகோபால், இன்ப துரை, அப்துல் ரஹீம், வி.வி.ஆர்.ராஜ் சத்யன், வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.