தென்காசியில் உணவக திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சமுத்திரக்கனி சென்றிருந்தார். அங்கு அவரிடம் படங்களுக்கு தரம் தாழ்ந்த விமர்சனம் வருவது தொடர்பான கேள்வி எழுப்பிய நிலையில்,

தரம் தாழ்ந்த விமர்சனம் செய்பவர்கள் மனநோயாளிகள். அவர்களை கடந்து போய்விட வேண்டும். அதற்கு ஒன்னும் பன்ன முடியாது. அவர்கள் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். நாம் நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.

அதேபோல் தமிழ் சினிமா வளர்ந்துகொண்டேதான் இருக்கும். ரசிகர்கள் உள்ளவரை சினிமா இருக்கும். வட சென்னை 2 படத்திற்கான வேலை நடந்துகொண்டு இருக்கிறது. குழந்தைகள் மனதில் நல்லதை விதைதால் அடுத்த தலைமுறை மாறும். அதற்காக வேலை செய்து வருகிறோம் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here