சக நடிகையை மோசமாக பேசியிருப்பது தன்னை காயப்படுத்தி உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு ஆட்சியை காப்பாற்ற தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை சசிகலா 10 நாட்கள் கூவத்தூரில் உள்ள பிரபல ரிசார்ட்டில் தங்க வைத்தார். சமீபத்தில் கட்சியில் இருந்து சேலம் அதிமுக நிர்வாக ஏவி ராஜு எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். மேலும் கூவத்தூர் சம்பவம் குறித்தும் அவர் பேசியிருந்தார்.

அந்த பேட்டியில் பேசிய அவர் “ கூவத்தூரில் எத்தனைஅ நடிகைகளை கூட்ட வந்தார்கள் தெரியுமா? அதில் எம்.எல்.ஏ வெங்கடாச்சலம் நடிகை த்ரிஷா தான் வேண்டும் என்று அடம்பிடித்தார். அதனால் நடிகர் ரூ.25 லட்சம் கொடுத்து த்ரிஷாவை கூவத்தூருக்கு அழைத்து வந்தார். இன்னும் நிறைய நடிகர்கள் வந்தனர்” என்று கூறினார்.

இந்த பேட்டி வைரலான நிலையில் த்ரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர்கள் சேரன், ஆர்.கே செல்வமணி ஆகியோர் கருத்து தெரிவித்தார். மேலும் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ கவனம் பெற எந்த நிலைக்கு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து செல்லும் கீழ்த்தரமான மனிதர்களை திரும்ப திரும்ப பார்க்கும் அருவருப்பாக உள்ளது. இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டரீதியாக அனைத்தையும் சொல்லப்போகிறேன்” என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் சக நடிகையை மோசமாக பேசியிருப்பது தன்னை காயப்படுத்தி உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த ஆடியோ பதில் “ அரசியல்வாதி ஒருவர் அருவருக்கத்தக்க வகையில் என் துறையில் உள்ள சக நடிகையை பேசி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள். சம்மந்தப்பட்ட நபர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

சமத்துவம் படைத்த தமிழகத்தில் இப்படியான கீழ்த்தரமான பேச்சு கண்டிக்கத்தக்கது. சக திரைத்துறை நடிகை குறித்து மோசமான முறையில் பேசியிருப்பது என் மனதை காயப்படுத்தி உள்ளது. இதுபோன்ற பேச்சுகள் ஆபத்தானவை. அருவருக்கத்தக்கவை. உரியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் த்ரிஷா குறித்து இதே மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து தரக்குறைவாக பேசியிருந்தார். இதையடுத்து அவர் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதன் உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கோரியிருந்தார். தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியது. தொடர் புகார்களை தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்த சூழலில் த்ரிஷாவுக்கு ஆதரவாக மன்சூர் அலிகான் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனிடையே அதிமுக நிர்வாகி ஏ.வி ராஜு த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். தான் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். த்ரிஷா அம்மாவின் மனம் புண்படும் படி பேசியிருந்தார் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்: என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here