வங்க கடலில் நாளை(செப்டம்பர் 5) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.