தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, மாநிலம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற யாத்திரை வாயிலாக தமிழக மக்களை சந்தித்து வருகிறார்.
இந்த யாத்திரையை அவர் பல்வேறு கட்டங்களாக நடத்திவருகிறார். இந்தப் பாதயாத்திரையை தென் மாவட்டங்களில் நிறைவு செய்துவிட்டார்.
யாத்திரையின் நிறைவு நாளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிகழ்வு நடந்தது.
அப்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி ஆம்பூர் போலீசார் தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, மாவட்டத் தலைவர் வாசு, நகரத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட 10 பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.