தவெக: கரூர் சம்பவத்திற்குப் பிறகு இன்று கூடும் சிறப்புக் பொதுக்குழு – அடுத்து என்ன?

prime9logo
96 Views
1 Min Read

கரூர் கூட்ட நெரிசல்  சம்பவத்திற்கு பிறகு, தவெக கட்சியின் சார்பில் ஒரு மாத காலம்  எவ்வித அரசியல் செயல்பாடுகளும் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தவெக வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று ( நவம்பர் 5)  கூடுகிறது.

 தவெக கட்சியின்  அடுத்த கட்டத் தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இந்த சிறப்பு பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து ஏற்கனவே தவெக தலைவர் வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த ஒரு மாத காலமாக, தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக்கொண்டிருக்கின்றனர். சூழ்ச்சிகளாலும் சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளனர்.

கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான், நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும்.

இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளோம். அதன்படி, வருகிற 05.11.2025 புதன்கிழமை அன்று, நம் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

வாருங்கள், சிறப்புப் பொதுக்குழுவில் கூடுவோம். வருங்காலம் நமதென்று காட்ட, தீர்க்கமாகத் திட்டமிடுவோம்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply