இயக்குனர் பார்த்திபன், மருத்துவம்- மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை சந்தித்தது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மனநிலையில் பணிப்புரிவது அவரிடம் நான் கண்ட சிறப்பு என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியம் அவர்கள் என் இல்லம் வந்திருந்தார்.
அவர் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று அவரும் நடந்து மற்றவர்களும் நடக்க ஊக்கப்படுத்துவார்.
தினமும் 10 km முதல் 45 km வரையிலும் கூட நடப்பார். நேரமில்லை என்ற நொண்டிச் சாக்கு அவரிடம் எடுபடாது.
நொண்டியாவது நடைபயிற்சியை தொடர்வார் கால் புண்ணாலும் கூட.
மழையை கண்டால் > மயில் போல உற்சாகத்தோடு இன்னும் சில மைல்கள் கூடுதலாக நடப்பார். அவரிடமிருந்து இப்பழக்கத்தை பின்பற்றி நடக்க விரும்புகிறேன்.
பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மனநிலையில் பணிப்புரிவது அவரிடம் நான் கண்ட சிறப்பு.
ஒவ்வொருவரிடமும் நான் கற்றுக் கொள்ள ஏதோ சில இருக்கத் தான் செய்கின்றன ” என தெரிவித்துள்ளார்.

