பட்டம் என்பது வெறும் காகிதம் அல்ல; மாணவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!.

மாணவர்களின் உழைப்பின் அங்கீகாரமே பட்டம்: பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

prime9logo
180 Views
1 Min Read
Highlights
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு.
  • பட்டம் என்பது காகிதம் அல்ல, அது மாணவர்களின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என பேச்சு
  • கல்வியால் தலைசிறந்த தமிழ்நாட்டின் மாணவர்கள் உலகளவில் உயர் பொறுப்புகளில் நிறைந்திட வேண்டும்!

சென்னையில் நடைப்பெற்ற பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின். இந்நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்,

பட்டம் என்பது வெறும் காகிதம் அல்ல, மாணவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,

” பட்டம் என்பது வெறும் காகிதமல்ல; மாணவர்களின் உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம்! அவர்களது எதிர்காலத்திற்கான திறவுகோல்!

புதிய வாய்ப்புகளை உருவாக்கிடும் தொழில்முனைவோர்களாக உயர்ந்தும், பல்வேறு இந்திய நிறுவனங்களிலும் – பன்னாட்டு நிறுவனங்களிலும் CEO உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் அமர்ந்தும், நமக்குப் பெருமை தேடித்தரவுள்ள பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் மாணவர்களை வாழ்த்திப் பட்டங்களை வழங்கினேன்!

கல்வியால் தலைசிறந்த தமிழ்நாட்டின் மாணவர்கள் உலகளவில் உயர் பொறுப்புகளில் நிறைந்திட வேண்டும்!

இன்னும் பல சாதனையாளர்கள் நம் மண்ணில் உருவாகிட எடுத்துக்காட்டாகத் திகழ்ந்திட வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply