கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி, தவெக நடத்திய பிரச்சார கூட்டத்தின் நெரிசலில் சிக்கி 41 பலியாகினர். இந்த நிகழ்விற்கு பிறகு தவெக தலைவர் விஜய் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்து இருந்தார்.
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் அவர்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. இருப்பினும் தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களை , கரூரில் இருந்து சென்னைக்கு வரவழைத்து நாளை மகாபலிபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவிருக்கிறார் தவெக தலைவர் விஜய்.இதற்காக ஆம்னி பேருந்துகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களை விஜய் விரைவில் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், தவெக தலைமையின் இந்த செயலை அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

