வடகிழக்கு பருவமழை: இதுவரை 31 பேர் உயிரிழப்பு – விரைவில் நிவாரணம் வழங்கப்படும் அமைச்சர் உறுதி!

கடலூரில் அதிகபட்சமாக 6 பேர் உயிரிழப்பு. மழை பாதிப்புகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்- அமைச்சர் உறுதி!

prime9logo
157 Views
0 Min Read
Highlights
  • வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு.
  • கடலூர் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்
  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக அரசின் நிவாரணம் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உறுதி.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அரசின் சார்பில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ் .எஸ்.ஆர். இராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது,

” இதுவரை மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.  அவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும். 


இதுவரை வடகிழக்கு பருவமழையால் 31 பேர்  உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கடலூரில் 6 பேர் உயிரிழப்பு.மழையால்  காயமடைந்தவர்கள் 47 பேர், கால்நடைகள் இறப்பு 485, கோழிகள் 20,425  மற்றும்  1780  குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதற்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் ” என தெரிவித்துள்ளார்.   

Share This Article
Leave a Comment

Leave a Reply