தமிழ்நாட்டில் இன்று   2 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

வடகிழக்கு பருவமழை தீவிரம்: சென்னை உட்பட பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு – 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை!

prime9logo
163 Views
1 Min Read
Highlights
  • வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது
  • திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று (அக்டோபர் 22) 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உட்பட 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல்  பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, 12 மணிநேரத்தில் ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெட் அலர்ட்

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று ( அக்டோபர் 22 )  திருவள்ளூர்,ராணிப்பேட்டை ஆகிய இரு மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும். எனவே இந்த இரு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply