Diwali: தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை- தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! அக்டோபர் 21 அன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவிப்பு

Surya
95 Views
1 Min Read
Highlights
  • தீபாவளிக்கு மறுநாள், 21.10.2025 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
  • சொந்த ஊர்களுக்குச் செல்லும் மாணவர்கள், ஊழியர்கள் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியீடு.
  • விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, 25.10.2025 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள். பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21.10.2025 அன்று விடுமுறை  அளித்து  தமிழ்நாடு  அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள். அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு 21.10.2025 அன்று ஒரு நாள் மட்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள்,  பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply