சென்னை :தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மூன்றாவது நாளாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தொடரில், கரூர் கூட்டநெரிசல் சம்பவம்,கிட்னி திருட்டு விவகாரம் போன்ற பிரச்சனைகள் குறித்து கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன.அதை தொடர்ந்து நேற்று அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து கரூர் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இன்றைய தினம் மீண்டும் அதிமுக உறுப்பினர்கள் கிட்னி திருட்டு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கிட்னிகள் ஜாக்கிரதை என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.
கிட்னி திருட்டு பிரச்சனையை இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான அதிமுக எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.