முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 10-ம் தேதி (திங்கட்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முக்கியமான திட்டங்கள் குறித்தும், பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்தும் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 6-ம் தேதி கூடியது. அப்போது கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என குற்றம் சாட்டி கவர்னர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here