பிக் பாஸ் சீசன் 8ல எலிமினேட் ஆகி மீண்டும் GUEST ஆக வந்த சிவகுமார், ரியா, வர்ஷினி, தர்ஷா குப்தா ஆகிய 5 பேரை அழைத்து பேசிய பிக் பாஸ், பகிரங்கமாக அனைவரையும் எச்சரித்திருந்தார். “வெளியே என்ன நடக்கிறது என்பதை உள்ளே சொல்லக்கூடாது என கூறியும் நீங்கள் அதை மீறி வருகிறீர்கள்.உங்களை தப்பு சொல்வதா, இல்லை அவர்களை தப்பு சொல்வதா என எனக்கே குழப்பமாக இருக்கிறது.

திரும்பவும் இதை நீங்கள் செய்தால் வெளியே செல்ல தயாராக இருங்கள்” என கடுமையாகவும் கூறுகிறார். இதன் பின்னர் ஐந்து பேரும் மாறி மாறி தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு வாய்ப்பை மீண்டும் உள்ளே வந்தவர்கள் சரியாக பயன்படுத்த தவறிய சமயத்தில் தான் சாச்சனா சொன்ன ஒரு வார்த்தை பிக் பாஸை இன்னும் கடுப்பேற்றி இருந்தது. “இனி அப்படி பேசுவதை நாங்கள் தவிர்க்க முயற்சி செய்கிறோம் பிக் பாஸ்” என சாச்சனா தெரிவிக்கிறார்.

இதை கேட்டதும், “முயற்சி தான் செய்வீர்களா. என்ன ஜோக் செய்கிறீர்களா சாச்சனா?” என கடுப்பாக, அதை அறிந்து சுதாரித்து கொண்ட சாச்சனா, “முயற்சி இல்லை, நான் கண்டிப்பாக செய்கிறேன்” என்றும் தெரிவிக்கிறார். தற்போது பிக் பாஸிடமும் அப்படி பேசி அவர் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here