2024 ஆண்டு, இது வரை ஏறத்தாழ 215 தமிழ் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் சிறந்த 15 படங்களை டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் எண்டெர்டெயின்மெண்ட் டைம்ஸ் பெஸ்ட் தமிழ் மூவீஸ் ஆஃப் 2024 என்கிற தலைப்பில் தேர்ந்தெடுத்துள்ளது. அதில் 5 க்கு 3 ஸ்டார்களைப் பெற்று மிஸ் யூ திரைப்படம் இடம் பிடித்துள்ளது. எண்டெர்டெயின்மெண்ட் டைம்ஸ் வெளியிட்டுள்ள சிறந்த 15 படங்களின் வரிசையில் முதலிடத்தை லப்பர் பந்து பிடித்துள்ளது. இப்படத்திற்கு 5 க்கு 4 ஸ்டார்கள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் தங்கலான் படமும், 3 வது இடத்தில் சொற்கவாசல் திரைப்படமும் பிடித்துள்ளது. அமரன், நீலநிறச் சூரியன், கடைசி உலகப் போர், கொட்டுக்காளி, டிமாண்டி காலனி 2, ரகு தாத்தா, அந்தகன், மின்மினி, நண்பன் ஒருவன் வந்த பிறகு, கருடன், லவ்வர், கேப்டன் மில்லர், அயலான், மேரி கிறிஸ்மஸ், விடுதலை பாகம் 2, மிஸ் யூ, ஒன்ஸ் அபான் அ டைம் இன் மெட்ராஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன.

இந்த வரிசையில் வசூல் சாதனையில் முதலிடம் பிடித்த விஜய்யின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், 3ஆம் இடத்தைப் பிடித்த வேட்டையன், நான்காம் இடத்தைப் பிடித்த மஹாராஜா 5 ஆம் இடத்தைப் பிடித்த இந்தியன் 2 ஆகிய படங்கள் சிறந்த படங்கள் வரிசையில் இடம்பெறவில்லை. 2024 ஆம் ஆண்டு வெளியாகி 320 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்து வசூலில் இரண்டாம் இடம் பிடித்த அமரன் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படங்கள் வரிசையில் 4 ஆம் இடம் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here