உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தற்போது நீதியரசன் சந்திரசூட் செயல்பட்டுவருகிறார். தனக்கு அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் அடுத்த மாதம் 10ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, விதிகளின்படி, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து சந்திரசூட்டின் பரிந்துரையை மத்திய அரசு கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
சந்திரசூட் கருத்துப்படி சஞ்சீவ் கண்ணா பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
சஞ்சீவ் கண்ணா 2019 இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வயது மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அவரை விட மேலான 33 நீதிபதிகள் இருக்கையில் சஞ்சீவ் கண்ணா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தகவல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.