விழுப்புரம் மாவட்டத்தின் அடையாளமாக இருப்பது செஞ்சிக்கோட்டை. இந்தியாவில் செஞ்சிக்கோட்டை உட்பட சுமார் 12 இடங்களை 2024-25 ஆம் ஆண்டில் உலக பாரம்பரிய அடையாளமாக UNESCO அறிவிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை மட்டும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் செஞ்சிக்கோட்டையை பார்வையிட்டு ஆய்வு செய்ய UNESCO குழுவினர் இன்று (செப்டம்பர் 27) ஆய்வு செய்கின்றனர். இந்தக் குழுவில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் உட்பட 21 பேர் இடம் பெற்றுள்ளனர்.
செஞ்சி ரோட்டில் இருந்து செஞ்சிக்கோட்டை ரோடு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய ரோடு அமைக்கப்பட்டது. யுனெஸ்கோ குழுவும் செஞ்சிக்கோட்டையில் ஆய்வு செய்வதால், பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளத்தை சுத்தம் செய்தனர். ஆங்காங்கே புதிய பெயர்ப்பலகைகளும், கோட்டையின் வரலாற்றைக் கூறும் வெண்கலத் தகவல் பலகையும், வெள்ளைச் சாயம் பூசப்பட்ட கல்யாண மஹாலும் கோட்டைக்கு புதுப் பொலிவைத் தருகின்றன. காலை 9 மணியளவில் செஞ்சி கோட்டைக்கு வரும் குழுவினர், மதியம் 1 மணி வரை ஆய்வு செய்கின்றனர். இந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், செஞ்சி கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.