இலங்கை வரலாற்றில் இரண்டாவது முறையாக வாக்குகள் எண்ணப்பட்டு, இலங்கையின் 9-வது ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயகே பதவியேற்றார்.
பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெதுவாக மீண்டு வருகிறன்து. இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 21) இலங்கையின் 9வது ஜனாதிபதி தேர்தல் நடந்தது. மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் மற்றும் 13,421 வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டன, 1.7 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.
எந்தவித வன்முறையும் இன்றி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது. 24 தொகுதிகளில் 16 தொகுதிகளில் ஆரம்பம் முதலே தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசநாயகே முன்னிலை வகித்தார். ஆனால், எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெறவில்லை. இதன்காரணமாக இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது முறையாக வாக்குகள் எண்ணப்பட்டன. அனுரகுமார திசநாயகே 42.31 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனைதொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இரண்டாவது இடத்துக்கும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்றாவது இடத்துக்கும் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயகே இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.