குரங்கம்மை பரவியதாக கருதப்படும் ஆப்பிரிக்க நாடான காங்கோவிற்கு 99,000 தடுப்பூசிகளை தவணையாக ஐரோப்பிய ஒன்றியம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு, காங்கோவில் சுமார் 5,000 பேர் குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 655 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில், 2 லட்சம் டோஸ் தடுப்பூசியை காங்கோவுக்கு வழங்குவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
தடுப்பூசிகள் குறித்த பொதுமக்களின் கவலைகள் காரணமாக, அடுத்த மாதம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்துவதாகவும், பின்னர் தடுப்பூசி போடுவதாகவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.