அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை துணிகள் 20ம் தேதிக்குள் வழங்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் இதர திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2024 2025 ஆம் ஆண்டிற்கு சமூக நலத் துறைக்கு விநியோகிக்கப்பட வேண்டிய இரண்டு இணை, பள்ளி சீருடை துணிகள் விநியோக முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பேசுகையில்: 2024 2025 ஆம் ஆண்டிற்கு சமூக நலத் துறைக்கு விநியோகிக்கப்பட வேண்டிய 237.36 இலட்சம் மீட்டர் துணிகளில் நாளது தேதி வரையில் 149.65 இலட்சம் மீட்டர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சமூக நலத் துறைக்கு தினசரி துணிகள் விநியோகம் செய்யப்படும் அளவினை அதிகரித்து எதிர்வரும் 20.06.2024க்குள் இரண்டு இணைக்கான துணிகள் முழுமையாக வழங்கப்படும்.

பொங்கல் 2025க்கான வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக சேலைகள்மற்றும் வேட்டிகளின் மாதிரியினை உற்பத்தி செய்து அதன் முழுவிலை பட்டியல் விவரத்துடன் அரசுக்கு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்த நேரத்தில் மக்களை சென்றடையும் வகையில் நடவடிக்கைகள் மற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here