நீலகிரி, கோவை, தேனி, தென்காசியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Priya
7 Views
1 Min Read

தமிழகத்தில் நாளை நீலகிரி, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கீழ் அடுக்குகளில் வலுவான வடகிழக்குக் காற்று வீசி, வங்கக்கடலில் இருந்து ஈரப்பதத்தைக் கொண்டு வருகிறது.

இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

30-ம் தேதி வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவ.19) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலத்தில் 8 செமீ, நீலகிரி மாவட்டம் குன்னூரில் 7 செமீ, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தலா 6 செமீ, நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட், கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை, கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply