தவெக சார்பில் மூன்றாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா: 5 மாவட்ட மாணவர்களுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை

Priya
14 Views
1 Min Read

தவெக சார்​பில் 3-ம் கட்ட கல்வி விருது வழங்​கும் விழா​வில் 5 மாவட்​டங்​களைச் சேர்ந்த மாணவ -மாண​வியருக்கு முதல்​வர் விஜய் சான்​றிதழ் மற்​றும் ஊக்​கத்​தொகை வழங்​கி​னார்.

தவெக சார்​பில் கடந்த மூன்று ஆண்​டு​களாக 10 மற்​றும் பிளஸ் 2 பொதுத்​தேர்​வில் மாநிலம் முழு​வதும் தொகு​தி​வாரி​யாக முதல் மூன்று இடங்​களைப் பிடித்த மாணவர்​களை கவுரவிக்​கும் வித​மாக கல்வி விருது விழா நடத்​தப்​பட்டு வரு​கிறது.

கடந்த நவ.4-ம் தேதி அரியலூர், கடலூர், கள்​ளக்​குறிச்​சி, விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை மாவட்ட மாணவர்​களுக்கு முதற்​கட்​ட​மாக உதவி தொகையை வழங்​கி​னார்.

இதனையடுத்து கடந்த 26-ம் தேதி நடந்த பரிசளிப்பு விழா​வில் கரூர், நாமக்​கல், சேலம் மற்​றும் திருச்சி மாவட்​டத்​தைச் சேர்ந்த மாணவர்​களுக்கு சான்​றிதழ் மற்​றும் ஊக்​கத்​தொகையை முதல்​வர் விஜய் வழங்​கி​னார்.

மேலும், அவ்​விழா​வில் கடந்த ஆட்சி காலத்​தில் நூல​கத்​துக்​கான புத்​தகங்​களை கொள்​முதல் செய்​யப்​பட்​ட​தில் ஊழல் நடை​பெற்​ற​தாக முதல் முறை​யாக முதல்​வர் விஜய் வாய் திறந்து பேசி​னார்.

இந்​நிலை​யில் 3-ம் கட்ட விருது வழங்​கும் விழா சென்னை நீலாங்​கரை​யில் நேற்று நடை​பெற்​றது. இந்த நிகழ்​வில் ஈரோடு, திருப்​பூர், கோவை, நீல​கிரி, பெரம்​பலூர் மாவட்​டங்​களைச் சேர்ந்த மாணவ – மாண​வியர்​களுக்கு முதல்​வர் விஜய் சான்​றிதழ் மற்​றும் ரூ.5 ஆயிரத்​துக்​கான காசோலை​யை வழங்​கி பா​ராட்​டி​னார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply